சிறப்புக் கட்டுரைகள்

பி.எம்.டபிள்யூ. 220 ஐ பிளாக் ஷாடோ எடிஷன் + "||" + BMW 220i Black Shadow Edition

பி.எம்.டபிள்யூ. 220 ஐ பிளாக் ஷாடோ எடிஷன்

பி.எம்.டபிள்யூ. 220 ஐ பிளாக் ஷாடோ எடிஷன்
பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் பிளாக் ஷாடோ எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது.
இந்நிறுவனத்தின் பிரபலமான 220 ஐ மாடலில் அறிமுகமாகியுள்ளது. பெட்ரோலில் ஓடும் இந்த மாடலில் மொத்தமே 24 கார்களை மட்டுமே இந்நிறுவனம் தயாரித்து உள்ளது. 190 ஹெச்.பி. மாடலில் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டது.

காரின் உள்பகுதியில் 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே, தொடு திரை உள்ளது. குரல் வழி கட்டுப்பாடு மூலம் இது செயல்படும். ரியர் வியூ கேமரா, ரிவர்ஸிங் அசிஸ்டன்ட், திறந்து மூடும் மேற்கூரை, ஸ்போர்ட்ஸ் இருக்கை உள்ளிட்ட பல சிறப்பம்சங்களைக் கொண்டது. பாதுகாப்பு அம்சமாக இதில் 6 ஏர் பேக்குகள் உள்ளன. ஏ.பி.எஸ்., டைனமிக் ஸ்டெபிலிடி கண்ட்ரோல், டிராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. 2 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ சார்ஜ்டு என்ஜினைக் கொண்டது.

இது 190 ஹெச்.பி. திறனையும், 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. 7 டியூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டது. இதில் மூன்று ஓட்டும் நிலைகள் (எகோ புரோ, கம்பர்ட், ஸ்போர்ட்) உள்ளன. இதை ஸ்டார்ட் செய்து 7.1 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும்.