சிறப்புக் கட்டுரைகள்

யமஹா ஒய்.இஸட்.எப். ஆர்.15 எஸ் + "||" + Yamaha YZF R15S

யமஹா ஒய்.இஸட்.எப். ஆர்.15 எஸ்

யமஹா ஒய்.இஸட்.எப். ஆர்.15 எஸ்
இளைஞர்கள் விரும்பும் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் யமஹா நிறுவனம் புதிதாக சூப்பர் ஸ்போர்ட் மோட்டார் சைக்கிளை ஒய்.இஸட்.எப். ஆர்.15 எஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
நீல நிறத்தில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்வதன் மூலம் மிக அதிக எண்ணிக்கையிலான வாடிக்கை யாளர்களை இந்நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளது. இது 155 சி.சி. திறன் கொண்ட 4 ஸ்டிரோக் லிக்விட் கூல்டு எஸ்.ஓ.ஹெச்.சி. என்ஜினைக் கொண்டது.

இது 18.6 பி.எஸ். திறனை 10 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும், 14.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 8,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். இதில் பியூயல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பம் வி.வி.ஏ. நுட்பத்துடன் புகுத்தப்பட்டுள்ளது. இது 6 கியர்களுடன் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி கொண்டதாக அறிமுகமாகியுள்ளது. பன்முக செயல்பாடுகளைக் கொண்டதாக எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வாகனம் எந்த கியரில் செல்கிறது என்பதைக் காட்டும் இன்டிகேட்டர், சைடு ஸ்டாண்ட் இன்டிகேட்டர் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. இது டெல்டா பாக்ஸ் பிரேமைக் கொண்டது. பின்புறம் அகலமான ரேடியல் டயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.