சிறப்புக் கட்டுரைகள்

பாம்பு போல நீந்தும் ‘பாம்பு தாரா’ + "||" + ‘Pambu Tara’ swims like a snake

பாம்பு போல நீந்தும் ‘பாம்பு தாரா’

பாம்பு போல நீந்தும் ‘பாம்பு தாரா’
நீர்நிலைகளில் வாழக்கூடிய பறவை இனங்களில் ஒன்றாக, ‘பாம்பு தாரா’ பறவை உள்ளது. இதனை ஆங்கிலத்தில் ‘டார்டர்’ (Darter) என்று அழைப்பார்கள்.
இந்தப் பறவையை ‘நெய் காக்கை’, ‘வழுவாங்கி’ என்ற பெயரிலும் குறிப்பிடுவதுண்டு. இந்தப் பறவையின் முக்கியமான உணவாக இருப்பது, மீன்தான். கொக்கு, நாரை, மீன்கொத்தி உள்ளிட்ட பல பறவைகள் மீனையே தன்னுடைய முக்கிய உணவாக உட்கொள்கின்றன. என்றாலும் மீனை சாப்பிடும் முறையின் காரணமாக, பாம்பு தாரா பறவை மற்ற பறவைகளிடம் இருந்து வேறுபடுகிறது. மற்ற அனைத்து பறவைகளும், நீரின் மேற்பரப்பில் தெரியும்படி நீந்தும் மீன்களையே தன்னுடைய அலகுகளால் கொத்தி சாப்பிடும்.

ஆனால் பாம்பு தாரா பறவை, நீரில் நீந்தியபடியே இருந்து, நீரில் மூழ்கி, அதன் ஆழம் வரை சென்று மீனைப் பிடித்து வரும். அதோடு நீரின் மேற்பரப்பிற்கு வந்ததும், தன்னுடைய அலகால் கவ்விப் பிடித்திருக்கும் மீனை, மேல்நோக்கி தூக்கி வீசி, அதன் தலைப்பகுதி தன்னுடைய வாய்க்குள் நுழையும்படி லாவகமாக சாப்பிடும் தன்மை கொண்டது.

இவை மீனை வேட்டையாடுவதற்காக நீருக்குள் நீந்தும்போது, பார்ப்பதற்கு பாம்பு போலவே காட்சியளிக்கும். இதன் காரணமாகத்தான், இந்தப் பறவைக்கு ‘பாம்பு தாரா’ என்று பெயர் வந்தது. அதோடு இதன் கழுத்துப் பகுதி நீளமாகவும், பாம்பைப் போல நெளிவு களோடும் காணப்படும்.

இந்தப் பறவையானது இனப்பெருக்க காலத்தில், நீர்நிலைகளின் அருகே உள்ள மரக்கிளைகளிலேயே கூடுகட்டிக்கொள்ளும். இதற்காக அவை, சிறிய குச்சிகள், சுள்ளிகளைப் பயன்படுத்துகின்றன.