பனிச்சறுக்கில் அசத்தும் 11 மாத குழந்தை


பனிச்சறுக்கில் அசத்தும் 11 மாத குழந்தை
x
தினத்தந்தி 4 Dec 2021 5:11 PM GMT (Updated: 4 Dec 2021 5:11 PM GMT)

பிறந்த 11 மாதங்களில் குழந்தைகள் நடக்க கொஞ்சம் சிரமப்படும். ஆனால் சீனாவை சேர்ந்த வாங் யுஜி என்ற 11 மாத குழந்தை பனிச்சறுக்கு விளையாட்டில் அசத்துகிறது.

யுஜிக்கு சில வாரங்கள் மட்டுமே பனிச்சறுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தாழ்வான பகுதியில் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முகத்தில் பயமே இன்றி, பனிச்சறுக்கி அசத்துகிறாள். தற்போது, ஹெபெய் மாகாணத்தின் சோங்லி மாவட்டத்தில் பனி பொழிந்து கொண்டிருக்கும் சரிவுகளில் தன் தாய் மற்றும் தந்தையுடன் 11 மாத குழந்தையான யுஜியும் இணைந்து பனிச்சறுக்கில் ஈடுபட்டு வருகிறாள்.

பாதுகாப்புக்காக சிறு கயிற்றால் ஸ்னோபோர்டை அவரது தந்தை பிடித்துக் கொண்டிருக்கும்போது, தந்தையின் முன்னிலையில் ஒரு சரிவில் அழகாக சறுக்குவதை வீடியோக்களில் காண முடிகிறது.

யுஜியின் தாயார், “யுஜியால் இன்னும் நடக்கவே முடியவில்லை. இருந்தாலும் பனிச்சறுக்கில் விளையாடுவதை எளிதாக கற்றுக்கொண்டாள். நம்மால் முடிந்த விளையாட்டு குறித்து குழந்தைக்கு கற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறோம். பனிச்சறுக்கில் ஈடுபடும்போது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறாள்” என்றார்.


Next Story