சிறப்புக் கட்டுரைகள்

வேலைவாய்ப்பு செய்திகள்: 7296 சுகாதார பணியாளர் இடங்கள் + "||" + Employment News: 7296 Healthcare Vacancies

வேலைவாய்ப்பு செய்திகள்: 7296 சுகாதார பணியாளர் இடங்கள்

வேலைவாய்ப்பு செய்திகள்: 7296 சுகாதார பணியாளர் இடங்கள்
7296 சுகாதார பணியாளர் இடங்கள் ஒப்பந்த முறையில் மாவட்ட வாரியாக நிரப்பப்பட உள்ளன.
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் துணை சுகாதார மையம் - நலவாழ்வு மையங்களில் இடைநிலை சுகாதார பணியாளர் (4848), பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்கள் மட்டும்), சுகாதார நிலை ஆய்வாளர் நிலை-II (2448) என மொத்தம் 7296 பணி இடங்கள் ஒப்பந்த முறையில் மாவட்ட வாரியாக நிரப்பப்பட உள்ளன.

இடை நிலை சுகாதார பணியாளர் பணிக்கு செவிலியர் பட்டய படிப்பு, இளங்கலை செவிலியர் பட்டப்படிப்பு (பி.எஸ்.சி. நர்சிங்) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பல்நோக்கு சுகாதார பணியாளர், சுகாதார ஆய்வாளர் பணிகளுக்கு 12-ம் வகுப்பு கல்வி தகுதியுடன் சம்பந்தப்பட்ட பணி சார்ந்த இரண்டு ஆண்டு படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்திருக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு 50 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட வாரியாக காலி பணி இடங்கள் மற்றும் விண்ணப்ப நடைமுறை சார்ந்த விவரங்களை தேசிய நலவாழ்வு குழும இணையதளத்தில் (https://nhm.tn.gov.in/en) தெரிந்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்தும் கொள்ளலாம். பின்பு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தையும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுந்த ஆவணங்களையும் இணைத்து சம்பந்தப்பட்ட மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தில் 15-12-2021 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.