போட் ராக்கர்ஸ் 205 புரோ வயர்லெஸ் இயர்போன்


போட் ராக்கர்ஸ் 205 புரோ வயர்லெஸ் இயர்போன்
x
தினத்தந்தி 7 Dec 2021 3:54 PM GMT (Updated: 7 Dec 2021 3:54 PM GMT)

ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் போட் நிறுவனம் புதிதாக ராக்கர்ஸ் 205 புரோ என்ற நெக் பேண்டுடன் கூடிய இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது வி 5.2 புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. 10 மி.மீ. அளவிலான இயர்போன் மிகத் துல்லியமான இசையைக் கேட்டு மகிழ உதவுகிறது.

இதில் இ.என்.எக்ஸ். தொழில்நுட்பம் உள்ளதால் மறுமுனையில் பேசுபவரது குரல் துல்லியமாகக் கேட்கும். சுற்றுப்புற இரைச்சலை முற்றிலுமாக தவிர்த்துவிடும். இது காந்த சக்தி கொண்ட இயர்போனாகும். ஒலி அளவு மற்றும் பாடல்களை மாற்றுவது உள்ளிட்டவற்றை எளிதாக மேற்கொள்ள முடியும். வியர்வை மற்றும் நீர்புகா தன்மை கொண்டது. 30 மணி நேரம் செயல்படும் வகையில் இதில் 200 எம்.ஏ.ஹெச். பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே 12 மணி நேரம் செயல்படும். நீலம், சிவப்பு, ஆரஞ்சு நிறங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.999.


Next Story