லிமிடெட் எடிஷன் பவர் பேங்க்


லிமிடெட் எடிஷன் பவர் பேங்க்
x
தினத்தந்தி 7 Dec 2021 4:08 PM GMT (Updated: 7 Dec 2021 4:08 PM GMT)

அம்பரேன் நிறுவனம் ஏரோசிங்க் பி.பி. பவர் பேங்கை லிமிடெட் எடிஷ னாக அறிமுகம் செய்துள்ளது.

இதில் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கையெழுத்து இடம்பெற்றுள்ளது. இந்த பவர் பேங்க் 10 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்டது. இதில் பிரத்யேக மான காந்த முறை சார்ஜிங் நுட்பம் உள்ளது. வயர் மூலமாக சார்ஜ் செய்ய 2 போர்ட்கள் உள்ளன. இதன் விலை சுமார் ரூ.3,999. எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் மிகச் சிறப்பான வடிவமைப்பைக் கொண்டதாக இது வந்துள்ளது.

இதில் மாக்சேப் தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது. கையிலிருந்து எளிதில் விழாத வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது. 15 வாட் மற்றும் 20 வாட் திறன் கொண்ட மின்னணு சாதனங்களை ஒரே சமயத்தில் இதன் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். இது முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப் படுவதாகும்.


Next Story