இன்ஸ்டாக்ஸ் மினி இவோ டிஜிட்டல் கேமரா


இன்ஸ்டாக்ஸ் மினி இவோ டிஜிட்டல் கேமரா
x
தினத்தந்தி 7 Dec 2021 4:27 PM GMT (Updated: 7 Dec 2021 4:27 PM GMT)

கேமரா தயாரிப்பில் முன்னணியில் உள்ள பியூஜி பிலிம் நிறுவனம் புதிதாக பிரிண்டருடன் கூடிய டிஜிட்டல் கேமராவை அறிமுகம் செய்துள்ளது.

இது இன்ஸ்டாக்ஸ் மினி இவோ என்ற பெயரில் வந்துள்ளது. அழகிய வடிவமைப்பு, அனலாக் மற்றும் கிளாசிக் தோற்றம் கொண்டதாக இது உள்ளது. முதலில் ஜப்பானிலும் பின்னர் பிற நாடுகளிலும் அறிமுகப்படுத்த பியூஜி பிலிம் திட்டமிட்டுள்ளது.

இதில் ஒரே சமயத்தில் 45 புகைப்படங்களை சேமித்து வைக்கும் திறன் கொண்டது. 1 ஜி.பி. நினைவக கார்டு மூலம் 850 புகைப்படங்களை சேமித்து வைக்க முடியும். இதில் 3 அங்குல டி.எப்.டி. எல்.சி.டி. திரை உள்ளது. மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் மூலம் சார்ஜ் செய்ய முடியும். கேமராவின் எடை 285 கிராம்.

Next Story