சிறப்புக் கட்டுரைகள்

நல்வாழ்வு மலரட்டும், நாடு செழிக்கட்டும் -பரமஹம்ச ஸ்ரீமத் பரத்வாஜ் சுவாமிகள் + "||" + May prosperity flourish and the country prosper - Paramahamsa Srimad Bhardwaj Swami

நல்வாழ்வு மலரட்டும், நாடு செழிக்கட்டும் -பரமஹம்ச ஸ்ரீமத் பரத்வாஜ் சுவாமிகள்

நல்வாழ்வு மலரட்டும், நாடு செழிக்கட்டும் -பரமஹம்ச ஸ்ரீமத் பரத்வாஜ் சுவாமிகள்
நாடெல்லாம்.. வீடெல்லாம் ‘பொங்கலோ பொங்கல்’ என்று குதூகலத்துடன் புன்னகை தவழும் முகங்களுடன் கொண்டாடி மகிழும் திருநாள், பொங்கல் பண்டிகை.
நாடெல்லாம்.. வீடெல்லாம் ‘பொங்கலோ பொங்கல்’ என்று குதூகலத்துடன் புன்னகை தவழும் முகங்களுடன் கொண்டாடி மகிழும் திருநாள், பொங்கல் பண்டிகை. இந்த இனிய நாளில், இனிவரும் நாட்களில் நம் இன்னல்கள் யாவும் மறைந்து, இனிய புதுவாழ்வும், புத்துணர்வும் பொங்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.


மகிழ்வாக பொங்கலிட்டு மகிழும் இந்த நல்ல நாளில், இனம்புரியாத ஒரு அச்சமும் இதயத்தை கனமாக்குவதையும், மக்கள் வருந்துவதையும் காண்கிறோம். காரிருள் நீக்கி கதிரவன் எழுவதைப் போல, மக்களையெல்லாம் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று, பல்வேறு வடிவங்களை எடுத்து வந்தாலும், அந்த நோயை நம் இல்லங்களில் வைக்கும் பொங்கலின் வெப்பத்தால் விரட்டியடித்து மகிழ்ச்சியை வழங்க இறைவனை பிரார்த்திப்போம்.

பொங்கல் பானையுடன் வைத்து படைக்கும் செங்கரும்பைப் போல, நம் வாழ்விலும் இனிமை பொங்கட்டும். செங்கரும்பின் சாறு போல நம் வாழ்வெல்லாம் இனிமை பரவட்டும் என்றும் இறைவனை வேண்டிக்கொள்வோம்.

இந்த இனிய பொங்கல் திருநாளில், அம்பாள் புவனேஸ்வரி தேவியின் பேரருள் அனைவரின் வாழ்விலும் பொழிவதாக வாழ்த்துகிறேன்.