லெக்சஸ் என்.எக்ஸ். எஸ்.யு.வி.


லெக்சஸ் என்.எக்ஸ். எஸ்.யு.வி.
x
தினத்தந்தி 26 Jan 2022 12:27 PM GMT (Updated: 26 Jan 2022 12:27 PM GMT)

பிரீமியம், சொகுசு கார்களில் பிரபலமானது லெக்சஸ். இதில் தற்போது எஸ்.யு.வி. மாடல் என்.எக்ஸ். என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது.

நவீன வடிவமைப்பு மற்றும் இரண்டாம் தலைமுறை மாடலாக இது வந்துள்ளது. முகப்பு விளக்கு, பெரிய அளவிலான கிரில், புதிய பம்பர், அனைத்தும் எல்.இ.டி. விளக்கு ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். உள்புறம் 10.3 அங்குல இன்போடெயின்மென்ட் திரை உள்ளது.

தானியங்கி முகப்பு விளக்கு, மழை உணர் செயல்பாடு கொண்ட வைபர், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் மொபைல் சார்ஜிங் வசதி, பேட்டரியில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான முன் இருக்கைகள் அனைத்தும் இந்த மாடலில் உள்ளன. ஏ.பி.எஸ்., இ.பி.டி., இ.எஸ்.சி., டிராக்‌ஷன் கண்ட்ரோல், முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.

இதில் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இது 143 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும். எலெக்ட்ரிக் மோட்டாருடன் சேர்ந்து இதன் ஒட்டுமொத்த திறன் 197 ஹெச்.பி. ஆகும். அனைத்து சக்கர சுழற்சி கொண்டது. எக்ஸ்கியூஸைட், லக்ஸுரி, எப்-ஸ்போர்ட் என மூன்று வேரியன்ட்களில் இது கிடைக்கும்.

Next Story