ஜியோமி 11 ஐ ஸ்மார்ட்போன்


ஜியோமி 11 ஐ ஸ்மார்ட்போன்
x
தினத்தந்தி 26 Jan 2022 1:03 PM GMT (Updated: 26 Jan 2022 1:03 PM GMT)

ஜியோமி நிறுவனம் புதிதாக ஜியோமி 11 ஐ மற்றும் ஜியோமி 11 ஐ ஹைபர் சார்ஜ் என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

இவை 6.67 அங்குல முழு ஹெச்.டி. அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிடி 920 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம்களைக் கொண்டதாகவும், 128 நினைவகம் உள்ளதாகவும் இவை வந்துள்ளன. நினைவகத் திறனை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்ய முடியும்.

இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. 108 மெகா பிக்ஸெல் கேமரா பின்புறம் உள்ளது. செல்பி பிரியர்களுக்காக முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் கொண்டது. இதில் 5160 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 67 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. ஜியோமி 11 ஐ மாடல் விலை சுமார் ரூ.24,999. ஹைபர் சார்ஜ் மாடல் விலை சுமார் ரூ.26,999.

Next Story