ஒன் பிளஸ் 9 ஆர்.டி.


ஒன் பிளஸ் 9 ஆர்.டி.
x
தினத்தந்தி 27 Jan 2022 6:12 AM GMT (Updated: 27 Jan 2022 6:12 AM GMT)

பிரீமியம் மாடல் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஒன் பிளஸ் நிறுவனம் 9 ஆர்.டி. மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.64 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரவ அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 888 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. இது 8 ஜி.பி. மற்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்டதாக வந்துள்ளது.

இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டு பயன்படுத்தும் வசதி உள்ளது. பட்டுபோன்ற மிருதுவான தொடு உணர் அளிக்கும் வகையில் இதன் கண்ணாடி உருவாக்கத்தில் இரண்டாம் தலைமுறை நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வியர்வை ஒட்டாத தன்மை மற்றும் விரல் ரேகை பதிவாகாத வகையில் கண்ணாடி உள்ளது. இதன் பின்புறத்தில் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. இதில் 4,500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 65 வாட் விரைவாக சார்ஜ் ஆகும் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.42,999. இதில் 12 ஜி.பி. ரேம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.46,999.

Next Story