ரியல்மி 9 ஐ ஸ்மார்ட்போன்


ரியல்மி 9 ஐ ஸ்மார்ட்போன்
x
தினத்தந்தி 27 Jan 2022 6:13 AM GMT (Updated: 27 Jan 2022 6:13 AM GMT)

ரியல்மி நிறுவனம் புதிதாக 9 ஐ என்ற பெயரில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.6 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டா கோர் ஸ்நாப்டிராகன் பிராசஸர் உள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதில் 6 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலையும் வாடிக்கையாளர் தேர்வு செய்து கொள்ளலாம். இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது.

இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. நீலம், கருப்பு நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் விலை சுமார் ரூ.13,999. இதில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.15,999.

Next Story