சோனி டபிள்யூ.எப். வயர்லெஸ் இயர்போன்


சோனி டபிள்யூ.எப். வயர்லெஸ் இயர்போன்
x
தினத்தந்தி 27 Jan 2022 6:22 AM GMT (Updated: 27 Jan 2022 6:22 AM GMT)

சோனி நிறுவனம் டபிள்யூ.எப். என்ற பெயரிலான வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.

மிக துல்லியமான இசையை உயர் தரத்தில் கேட்டு மகிழும் வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது. அனைத்து வகையான ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் இதை இணைத்து செயல்படுத்த முடியும். புளூடூத் 5.0 இணைப்பு வசதி கொண்டது.

இதில் உள்ள பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் செயல்படும். கருப்பு, வெள்ளை, ஆரஞ்சு, பச்சை உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.5,990.

Next Story