ராபூ கேமிங் கீ போர்டு


ராபூ கேமிங் கீ போர்டு
x
தினத்தந்தி 27 Jan 2022 6:28 AM GMT (Updated: 27 Jan 2022 6:28 AM GMT)

மின்னணு உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு நிறுவனமான ராபூ, வீடியோ கேம் பிரியர்களுக்கென புதிய கீ போர்டை அறிமுகம் செய்துள்ளது.

வீடியோ கேம் விளையாடுவதற்கேற்ற வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது. வி 700 என்ற பெயரில் வந்துள்ள இந்த கீ போர்டில் வீடியோ கேம் விளையாட்டுக்குத் தேவையான அனைத்து வித வசதிகளும் உள்ளது. கேம் கண்ட்ரோலர் செயல்பாடுகளுக் கேற்ப இதன் கீ போர்டு செயல்பாடு இருக்கும். ஒவ்வொரு பொத்தானும் 4 மி.மீ. அளவுக்கு நகரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் துல்லியமாக கேம் விளையாட முடியும். மொத்தம் 108 பொத்தான்கள் உள்ளன. இதன் பின்னணியில் ஆர்.ஜி.பி. எல்.இ.டி. விளக்குகள் ஒளிரும். இதனால் இருட்டில் வீடியோ கேம் விளையாடும்போது கீ போர்டு ஒளி பிரகாசித்து சிறப்பாக விளையாட உதவும். இது கழற்றி மாட்டும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.4,999.

Next Story