இன்று உலக புவி தினம் கடைபிடிப்பு..


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 April 2022 5:57 AM GMT (Updated: 22 April 2022 7:52 AM GMT)

பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் மற்றும் புவி மாசடைவதைத் தடுக்கும் எண்ணத்துடன் உலக புவி தினம் என்று கடைப்பிடிக்கப்படுகிறது.

புதுடெல்லி,

உலக உயிர்கள் வாழத் தகுதியான இடமாக இந்த பூமி மட்டுமே இருப்பதாக ஆய்வுகள் பதிவு செய்கின்றன. அத்தகைய அற்புதம் நிறைந்த இந்த பூமி, மனிதர்களின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, காற்று மாசடைந்து, தன்னுடைய தனித்தன்மையை இழந்து கொண்டிருக்கிறது. 

இப்படியே போனால், இந்த பூமியில் உலக உயிர்கள் வாழ்வது என்பது கேள்விக்குறியாகிவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதற்கு இன்னும் பல கோடி ஆண்டுகள் ஆகலாம் என்றாலும், அதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதும், அந்த இக்கட்டான சூழலை நம்முடைய பிற்கால சந்ததியினர் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதுமே இங்கிருக்கும் அபாயம்.

பூமியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், புவி மாசடைவதைத் தடுக்கும் எண்ணத்துடனும், 1970-ம் ஆண்டு முதல், ஏப்ரல் 22-ந் தேதியை உலக புவி தினமாக கடைப்பிடித்து வருகிறோம்.  உலகம் முழுவதும் 175 நாடுகள் இந்த தினத்தை கடைப்பிடிக்கின்றன.


Next Story