சிறப்புக் கட்டுரைகள்

மீண்டும் புயலா? மழையா? + "||" + Storm again? At least the rains? MR. Pradeep John, Tamil Nadu Weatherman

மீண்டும் புயலா? மழையா?

மீண்டும்  புயலா? மழையா?
வங்கக்கடலில் உருவான ‘கஜா’ புயல் நாகை – வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. கஜா புயலால் டெல்டா மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 111 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் அளவு பதிவாகி இருந்தது.
1993–ம் ஆண்டு வீசிய புயலுக்குப் பிறகு தற்போது காற்றுள்ள புயலாக மாறி கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதி. அங்கு கிழக்குப்பகுதியில் இருந்து காற்று உள்ளே வரும். இதனால் அங்கு அதிகமான மழை பெய்து உள்ளது. கொடைக்கானல் போட் கிளப் பகுதியில் தமிழகத்தில் அதிகபட்சமாக 250 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தற்போது கஜா புயல் அரபிக்கடல் பகுதிக்கு சென்றுவிட்டது. அது மீண்டும் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்திய கடற்கரையை விட்டு விலகி சென்று விட்டது.


இந்த நிலையில் தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை பகுதி உருவாகக்கூடும். 19 மற்றும் 20–ந்தேதியில் மேற்கு வடமேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது புயலாக மாறுமா? காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுமா? என்பது போக போகத்தான் தெரியும். நேரம் குறைவாக உள்ளதால் அதிகமாக காற்று இருக்கும் என்று மக்கள் அச்சப்பட தேவை இல்லை. ஆனால் மழை சார்ந்த, தாழ்வு நிலையாகவோ, மண்டலமாகவோ இருக்க வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி 3 நாட்கள் நீடிக்கும். இதனால் சென்னையிலும், வடதமிழகத்திலும், டெல்டா மாவட்டங்களிலும் கன மழை பெய்யும்.

டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவ மழைக்காலம். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 50 சதவீதம் தண்ணீர் உள்ளது. கடும் மழை பெய்யும் பட்சத்தில் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி குடிநீர் தட்டுப்பாடு நீங்க வாய்ப்புள்ளது.

மழை வரும் என்பது உறுதியாகி விட்டதால் மக்கள் மழை நீரை சேமிப்பதில் ஆர்வம் காட்டவேண்டும்.

- ஆர்.பிரதீப்ஜான், தமிழ்நாடு வெதர்மேன்

அதிகம் வாசிக்கப்பட்டவை