சிறப்புக் கட்டுரைகள்

விலையும் இல்லை.. நிலையும் இல்லை..விலைமாதர்கள் கவலை + "||" + No price .. no status .. Prostitutes concern

விலையும் இல்லை.. நிலையும் இல்லை..விலைமாதர்கள் கவலை

விலையும் இல்லை.. நிலையும் இல்லை..விலைமாதர்கள் கவலை
‘சிவப்பு விளக்கு பகுதி’ என்பது, இந்தியாவில் சில மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட இடமாக இயங்கிக்கொண்டிருக்கிறது.
‘சிவப்பு விளக்கு பகுதி’ என்பது, இந்தியாவில் சில மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட இடமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. பாலியல் உணர்வுகள் வயதுக்கு வந்த ஆண்கள் அனைவருக்கும் இருந்தாலும் பலரும் சிவப்பு விளக்கு பகுதியை நாடுவதில்லை. பெரும்பாலானவர்கள் இந்த இடத்தை பற்றி சினிமாக்களில்தான் பார்த்திருக் கிறார்கள். கோடிகளில் சம்பளம் வாங்கும் பல நடிகைகள் விலை மாதர்களாக நடித்திருக்கின்றனர்.

அவர்களின் நடிப்பைவைத்தும், சினிமாக்களில் பார்த்திருக்கும் காட்சிகளை வைத்தும், ‘சிவப்பு விளக்கு பகுதி இப்படித்தான் இருக்கும்’ என்ற கற்பனை எல்லோர் மனதிலும் இருந்துகொண்டிருக்கிறது. அதாவது அதனை ஒரு ஜாலியான இடமாகவும், பணம்புரளும் இடமாகவும், கூத்தும் கும்மாளமும் நடக்கும் இடமாகவும்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை!

சிவப்பு விளக்கு பகுதி என்றாலே சில சினிமாக் காட்சிகள் நம் கண்முன்னே விரியும். பிரபல நடிகைகள் மீனாகுமாரி, ரேகா, வித்யாபாலன் போன்றோர் நம் கண் முன்னே வந்து போவார்கள். அவர்கள் விலைமாது களாக நடித்து புகழ் பெற்றவர்கள். பல கோடிகளை குவித்த ‘டர்ட்டி பிக்சர்ஸ்’ படத்தில் வித்யாபாலன் கிட்டதட்ட அப்படி ஒரு கதாபாத்திரத்தில்தான் நடித்தார். உம்ராவ்ஜான் படத்தில் ரேகா விலைமாதுவாக நடித்திருக்கிறார். கரீனா கபூர் சமேலி மற்றும் தலாஷ் போன்ற படங்களில் இந்த கதாபாத்திரத்தை ஏற்றி ருக்கிறார். மங்கள்பாண்டேவில்-ராணி முகர்ஜி, அமர் பிரேமில்-ஷர்மிளா தாகூர் போன்ற கதாநாயகிகளும் அந்த வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சாந்தினி பார் படத்தில் நடிகை தபு விலைமாது கதாபாத்திரத்திற்காக தேசிய விருது பெற்றிருக்கிறார்.

புதுடெல்லியில் வசிக்கும் தினேஷ்குமார் என்ற இளைஞர் சிவப்பு விளக்கு பற்றி தெரிந்துகொள்ள புறப்பட்டார். அலகாபாத்தில் உள்ள மீர்கஞ்ச் என்ற சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்றார். அங்கு அப்படிப்பட்ட பல தெருக்கள் உள்ளன. மொழிவாரியாக அங்கு பெண்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். மதராசி தெருவிற்குள் நுழைந்தால் அங்கே தமிழ் பேசும் விலைமாதர்கள் மட்டும் உள்ளனர்.

சினிமாவில் காட்டுவதுபோல் அவர்கள் வாழ்க்கை இல்லை. ‘மேக் அப்’ போட்ட முகங்கள். இறுகிய உணர்வுகள். எதிர்காலத்தை இருட்டில் தொலைத்த ஒளி இழந்த விழிகள். எங்கே செல்லும் இந்த பாதை...? என்ற கேள்விக் குறியோடு அவர்கள் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது. அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில் அவர்கள் நரக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஒரேஅறையில் பல பெண்கள் வசிக்கிறார்கள். தடுப்புச் சுவர் என்ற பெயரில் சாயம்போன புடவைகள் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.

காற்று வசதியோ, தண்ணீர் வசதியோ கிடையாது. முறையாக பராமரிக்கப்படாத கழிவு நீர் கால்வாய்களை கொசுக்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. துர்நாற்றம் வீசுகிறது. வாரத்திற்கு ஒருமுறை விலைமாது களுக்கு விடுமுறையும், சம்பளமும் வழங்கப்படுகிறது. குழுவாக வாழும் அவர்கள் தங்களுக்கு தேவையான உணவை தாங்களே தயாரித்துக் கொள்கிறார்கள். சுத்தமான குடிநீர் அவர்களுக்கு கிடைப்பதில்லை. வெளிஉலகத் தொடர்பும் இல்லை. போதுமான பணமும் கிடையாது. உழைப்பிற்கேற்ற ஊதியம் என்ற அவர்களுக்கு வார இறுதியில் சம்பளம் வழங்குகிறார்கள். அதற்கு மேல் எதுவும் கிடையாது. மாதமொரு முறை இலவச மருத்துவ பரிசோதனைக்கும் அவர்களை அனுமதிக் கிறார்கள்.

விலைமாதுகள் தனித்தனி குழுவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவர் இருக்கிறார். அவர்தான் வருமானத்தை கணக்கிடுகிறார். தனக்கான கமிஷனை எடுத்துக்கொண்டு. விலைமாது களுக்கு அவர்களது பணிக்கு தக்கபடி பணத்தை பிரித்துக்கொடுக்கிறார். அந்த பணத்தைவைத்து அவர்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் அனுமதியின்றி வெளியே செல்ல முடியாதநிலை உள்ளது. அவர்களுடைய தொலைபேசி முதற்கொண்டு அனைத்து அசைவு களையும் கண்காணிக்க ஒரு மேற்பார்வையாளர் உள்ளார். அவர்களது செயல்பாட்டில் ஏதாவது சந்தேகம் வந்துவிட்டால் அவ்வளவுதான் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள். பெண்களை பல நாட்கள் இருட்டறையில் அடைத்துவைத்து பட்டினிபோடுகிறார்கள். சூடு வைக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் தகுந்த சிகிச்சை கிடைப்பதில்லை. அவர்களுக்கென்றே இயங்கும் தனி மருத்துவமனைக்குச் சென்று உடலை பரிசோதித்துக் கொள்ளவேண்டும். அதையும் மீறி உடல்பாதிக்கப்பட்டால், அந்த பெண்ணை அடித்துதுரத்திவிடுவார்கள்.

இந்தியாவை பாரத தாய் என்றழைக்கும் நாம், தெய்வங்களை பெண்ணாக பார்க்கும் நாம் தான் இந்த பாவத்தை செய்கிறோம்!