சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : ஒகினோவா பிரைஸ் புரோ + "||" + Vanavil : Okinawa Price Pro

வானவில் : ஒகினோவா பிரைஸ் புரோ

வானவில் : ஒகினோவா பிரைஸ் புரோ
பேட்டரி ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஒகினோவா நிறுவனம் பிரைஸ் புரோ என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.71,900 ஆகும்.
2 கிலோவாட் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி இதில் உள்ளது. அத்துடன் இதில் ஒரு கிலோவாட் டி.சி. எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது.

இந்த மோட்டார் நீர்புகா (வாட்டர் புரூப்) தன்மை கொண்டது. இதில் எகானமி (30 முதல் 35 கி.மீ), ஸ்போர்ட் (50 முதல் 60 கி.மீ), டர்போ (65 முதல் 70 கி.மீ) ஆகிய மூன்று ஓட்டும் நிலைகள் உள்ளன.

தேர்வு செய்யும் நிலைக்கேற்ப வாகனத்தின் வேகம் இருக்கும். அதேபோல வாகனம் பேட்டரி தீர்வதும் இதைப் பொருத்தே அமையும். எகானமியில் 88 கி.மீ. முதல் 110 கி.மீ. வரையில் ஓடக்கூடியது. வீடுகளில் சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் சார்ஜிங் சாக்கெட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. டெலஸ்கோப்பிக் ஷாக் அப்சார்பர் முன்புறத்திலும், பின்பகுதியில் இரண்டு பக்கமும் ஷாக் அப்சார்பரைக் கொண்ட தாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் அலாரம் வசதி, ஸ்கூட்டரை கண்டறியும் வசதி, யு.எஸ்.பி. சார்ஜிங் வசதி, நடந்து கொண்டே தள்ளிச் செல்லும் வசதி ஆகியவற்றோடு முன்புறம் மட்டுமின்றி ரிவர்ஸ் கியரும் உள்ளது. இது கிளாஸி ரெட் பிளாக் மற்றும் ஸ்பார்க்கிள் பிளாக் ஆகிய இரு வண்ணங்களில் வந்துள்ளது.