சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : புதிய ஆக்டிவா 125 எப்.ஐ. + "||" + Vanavil : The new Activa 125 FI.

வானவில் : புதிய ஆக்டிவா 125 எப்.ஐ.

வானவில் : புதிய ஆக்டிவா 125 எப்.ஐ.
இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னிலையில் உள்ள ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா 125 மாடலில் பி.எஸ்6. புகை சோதனை விதிகளை பூர்த்தி செய்து ‘நியூ ஆக்டிவா 125 எப்.ஐ.’ என்ற பெயரில் புதிய மாடலை அறிமுகப்படுத்திஉள்ளது.
புதிதாக 26 பாகங்கள்  இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே இந்நிறுவனம் காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ள பிரத்யேக பாகங்களாகும். இதில் இந்நிறுவனம் வடிவமைத்த புரோகிராம்டு பியூயல் இன்ஜெக்‌ஷன் பி.ஜி.எம்.ஐ. உள்ளது. அத்துடன் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பவர் (இ.எஸ்.பி.) தொழில்நுட்பமும் புகுத்தப்பட்டுள்ளது. இது என்ஜினின் செயல்திறனை அதிகரிப்பதோடு எரிபொருள் விஷயங்களில் சிக்கனமானது.

பார்ப்பதற்கு முந்தைய மாடலைப் போலவே தோற்றமளித்தாலும், இதில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. முகப்பு விளக்கு பக்கவாட்டு பேனல்களின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. பின்புற விளக்கிலும் குரோமியம் சுற்றுப் பகுதிக்கு தரப்பட்டுள்ளது.

ஆறு வண்ணங்களில் இது கிடைக்கும். மேலும் இதில் ஸ்டார்ட்டர் சிஸ்டம் மேம்படுத்தப் பட்டுள்ளது. முந்தைய மாடலில் ஸ்டார்ட் செய்யும்போது சிறிதளவு சத்தம் கேட்கும். ஆனால் இதில் அத்தகைய பிரச்சினையும் கிடையாது. ஏ.சி. ஜெனரேட்டரில் பயன்படுத்தும் ஆல்டர்நேட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஆன் செய்யும்போது சத்தத்தை முற்றிலுமாக குறைத்துவிடுகிறது.

முந்தைய மாடலில் இல்லாத வெளிப்புற பெட்ரோல் பில்லர் மூடி, லைட் சுவிட்ச், முன்புற பெட்டி ஆகியன இதில் உள்ள கூடுதல் அம்சங்களாகும்.