நிதி நிலை முடிவுகள்


நிதி நிலை முடிவுகள்
x
தினத்தந்தி 17 Oct 2019 6:33 AM GMT (Updated: 17 Oct 2019 6:33 AM GMT)

இந்திய நிறுவனங்கள் நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. முன்னணி நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் வருமாறு:-

உத்தம் கால்வா
உத்தம் கால்வா ஸ்டீல்ஸ் நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.335 கோடியை நிகர இழப்பாக கண்டுள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.584 கோடியாக இருந்தது. இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 4 சதவீதம் சரிந்து (ரூ.147 கோடியில் இருந்து) ரூ.141 கோடியாக குறைந்து இருக்கிறது.

டென் நெட்வொர்க்ஸ்
டென் நெட்வொர்க்ஸ் நிறுவனம், ஜூலை- செப்டம்பர் காலாண்டில் ரூ.15 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே காலாண்டின் இந்நிறுவனத்தின் இழப்பு ரூ.28 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 4 சதவீதம் குறைந்து ரூ.48 கோடியாக இருக்கிறது.

எம்.சி.எக்ஸ்.
எம்.சி.எக்ஸ். நிறுவனம், நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (2019 ஜூலை-செப்டம்பர்) ரூ.72 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது இரண்டு மடங்கு உயர்வாகும். அப்போது லாபம் ரூ.36 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 55 சதவீதம் அதிகரித்து ரூ.144 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.93 கோடியாக இருந்தது.

ஏ.சி.சி.
ஏ.சி.சி. நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 44 சதவீத வளர்ச்சியுடன் ரூ.302 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.209 கோடியாக இருந்தது. இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 25 சதவீதம் உயர்ந்து ரூ.557 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.443 கோடியாக இருந்தது.

டீ.பீ. கார்ப்
டீ.பீ. கார்ப் நிறுவனம், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரூ.76 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே காலாண்டின் அது ரூ.46 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 63 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 8.7 சதவீதம் குறைந்து ரூ.531 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.582 கோடியாக இருந்தது. மொத்த செலவினம் (ரூ.517 கோடியில் இருந்து) ரூ.469 கோடியாக குறைந்துள்ளது.

இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு நடப்பு நிதி ஆண்டிற்கு (2019-20) ரூ.10 மதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.6.50-ஐ இடைக்கால டிவிடெண்டாக அறிவித்துள்ளது.

Next Story