சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : 100 அங்குல பிரமாண்ட டி.வி + "||" + Rainbow: 100-inch massive TV

வானவில் : 100 அங்குல பிரமாண்ட டி.வி

வானவில் :  100 அங்குல பிரமாண்ட டி.வி
வூ நிறுவனம் 100 அங்குலம் கொண்ட பிரமாண்ட சூப்பர் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
4 கே ரெசல்யூஷனைக் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டி.வி.யில் 120 ஜி.பி. நினைவக வசதி உள்ளது. இதில் டால்பி மற்றும் டி.டி.எஸ். ஆடியோ தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புளூடூத் மூலம் செயல்படக் கூடியது. பன்முக யு.எஸ்.பி. போர்ட் வசதிகள் உள்ளதால் இதில் பதிவேற்றம், பதிவிறக்கம் ஆகியன மிகவும் எளிதாக இருக்கும். ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் விண்டோஸ் 10 இயங்குதளத்தைக் கொண்டது.

இதில் இன்டெல் கோர் ஐ3 மற்றும் கோர் ஐ5 பிராசஸரில் ஏதேனும் ஒன்றை வாடிக்கையாளர் தேர்வு செய்யலாம். இதில் டி.வி. டியூனர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொலைக்காட்சி பார்க்கும் அனுபவத்திலிருந்து மாறி சூப்பர் டி.வி. பார்க்கும் அனுபவத்தை உங்களுக்கு இது நிச்சயம் அளிக்கும். இத்துடன் வயர்லெஸ் குவார்டி கீ போர்டு மற்றும் வயர்லெஸ் மவுஸ் வழங்கப்படுகிறது.

பொழுது போக்கு அம்சங்கள் இல்லாத நேரத்தில் இதை கம்ப்யூட்டராகவும் பயன்படுத்த முடியும். சுவற்றில் பதிக்கும் வகையில் இந்த டி.வி. உருவாக்கப்பட்டுள்ளது.