தனித்தீவில் தரையிறங்கிய முதல் விமானம்


தனித்தீவில் தரையிறங்கிய முதல் விமானம்
x
தினத்தந்தி 2 Nov 2019 12:13 PM GMT (Updated: 2 Nov 2019 12:13 PM GMT)

தென்அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதிக்கும், ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதிக்கும் இடையில், தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் ஒரு துளி போல உள்ள தீவுதான், செயின்ட் ஹெலனா.

செயின்ட் ஹெலனாவில் விமானப் போக்குவரத்து தொடங்கும்வரை, தென்ஆப்பிரிக்காவில் இருந்து 3 வாரங்களுக்கு ஒருமுறை வந்துசெல்லும் ஒரு கப்பல்தான் ஒரே வெளியுலகத் தொடர்புவழியாக இருந்தது.

இங்கிலாந்தின் ஆளுகைக்கு உட்பட்ட இந்தத் தீவின் மொத்தப் பரப்பளவு வெறும் 122 சதுர கிலோமீட்டர்தான். இத்தீவை ஒட்டி, அசென்சியான், டிரிஸ்டான் டா குன்ஹா என்று மேலும் இரு தீவுகள் உள்ளன. இத்தீவுகளின் மொத்த மக்கள்தொகை, 5 ஆயிரத்துக்கும் குறைவு.

செயின்ட் ஹெலனா தீவுக்கு மற்றொரு வரலாற்றுச் சிறப்பும் உண்டு. மாவீரர் நெப்போலியன், இங்கிலாந்தின் கைதியாக தனது கடைசிக் காலத்தை இத்தீவில்தான் கழித்தார்.

செயின்ட் ஹெலனாவுக்கு பெருமை பெற்றுத்தரும் இன் னொன்று, ‘ஜோனாதன்’. இந்த மிகப் பெரிய ஆமை, உலகிலேயே வயதான முதுகெலும்புப் பிராணி என்றும், இதன் வயது 184 என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Next Story