சிறப்புக் கட்டுரைகள்

வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான் + "||" + Employment News: The call is for you

வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்

வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்
செயில் உருக்கு ஆலை நிறுவனத்தில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 105 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
உருக்கு நிறுவனம்

துர்காபூரில் செயல்படும் செயில் (SAIL) உருக்கு ஆலை நிறுவனத்தில் உதவி மேலாளர், ஆபரேட்டர் கம் டெக்னீசியன், அட்டண்ட் கம் டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 105 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி யிடங்கள் உள்ளன. பி.எஸ்சி. நர்சிங், பி.இ., பி.டெக் பட்டப்படிப்புகள், டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்புகள், ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.

அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஜனவரி 27-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.sail.co.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

பருத்தி நிறுவனம்

மத்திய துணித்துறையின் கீழ் செயல்படும் காட்டன் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் அசிஸ்டன்ட் கம்பெனி செகரட்ரி, அசிஸ்டன்ட் மேனேஜர், மேனேஜ்மென்ட் டிரெயினி, ஜூனியர் அசிஸ்டன்ட், இந்தி டிரான்ஸ்லேட்டர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

மொத்தம் 75 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்தந்த பணிக்கான காலியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

எம்.பி.ஏ., பி.இ.சிவில், சட்டப்படிப்பு, இந்தி பட்டப்படிப்பு, அக்ரி பிஸினஸ் மேனேஜ்மென்ட், சி.ஏ., சி.எம்.ஏ., பி.எஸ்சி. அக்ரி, பி.காம் உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஜனவரி 27-ந்தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.cotcorp.org.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

டெலிபோன் நிறுவனம்             

இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரிஸ் லிமிடெட் (ஐ.டி.ஐ. லிட்) எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 129 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 28 வயதுக்கு உட்பட்ட, பட்டதாரி என்ஜினீயர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு ரூ.400 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். ஜனவரி 25-ந்தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். நகல் விண்ணப்பம் ஜனவரி 30-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும்.

இது பற்றிய கூடுதல் விவரங்களை http://www.itiltd.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்
ஐ.டி.ஐ. படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு டெக்னீசியன், அசிஸ்டன்ட் டெக்னீசியன் போன்ற பணியிடங்களில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
2. வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்
திருவாங்கூர் உரம் மற்றும் ரசாயன நிறுவனம் சுருக்கமாக FACT என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.