வானவில் : ஹானர் மேஜிக் கடிகாரம்


வானவில் : ஹானர் மேஜிக் கடிகாரம்
x
தினத்தந்தி 22 Jan 2020 2:02 PM GMT (Updated: 22 Jan 2020 2:02 PM GMT)

இந்நிறுவனம் அமோலெட் திரை கொண்ட மேஜிக் ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள பேட்டரி 14 நாட்கள் வரை நீடித்திருக்கும். இதன் விலை ரூ.11,999 ஆகும்.

புளூடூத் இணைப்பு மூலம் செயல்படும் இந்த கடிகாரத்தின் மூலம் ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் இருப்பதால் இதிலிருந்தும் போன் செய்ய முடியும்.

இதில் 15 வகையான விளையாட்டுகளுக்கான பிட்னெஸ்ஸை பதிவு செய்ய முடியும். இது தவிர இதய துடிப்பு, ரத்தத்தில் பிராணவாயு குறைவது, ரத்த அழுத்த நிர்வாகம் உள்ளிட்டவற்றையும் இதன் மூலம் சிறப்பாக கண்காணித்து உடல் நிலையை சீராக வைத்துக்கொள்ள முடியும். தூக்க குறைபாடுகளையும் இது கண்டறிந்து உணர்த்தும். 50 மீட்டர் ஆழம் சென்றாலும் நீர் புகா தன்மை கொண்டது.

இரட்டை அலைவரிசை ஜி.பி.எஸ். சிஸ்டம் உள்ளது. மேலும் இதில் 455 எம்.ஏஹெச் பேட்டரி உள்ளதால் 14 நாட்கள் வரை செயல்படும் தன்மை கொண்டது. அகேட் பிளாக் விலை ரூ.14,999, சகுரா கோல்டு விலை ரூ. 12,999, பிரவுன் கலர்விலை ரூ. 14,999 ஆகியவற்றையும் விருப்பத்துக்கேற்ப தேர்வு செய்யலாம்.

பேண்ட் 5 ஐ

இந்நிறுவனம் 0.96 அங்குல அளவிலான ஸ்மார்ட் கடிகாரத்தையும் அறிமுகம் செய்துள்ளது. ஹானர் 5 ஐ என்ற பெயரில் வந்துள்ள இந்த வாட்ச்சின் விலை ரூ.1,999. இதில் இதய துடிப்பை அளவிடும் தொழில் நுட்பம் உள்ளது. நீர் புகா தன்மை கொண்டது. ஓட்டம், சைக்கிள், நீச்சல் உள்ளிட்ட நடவடிக்கையின்போது உங்கள் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை இது காட்டும்.

இதில் உள்ள ட்ரூஸ்லீப் நுட்பம் உங்களின் தூக்க செயல்பாடுகளை அளவிடும். இதில் உள்ள எஸ்.பி.ஓ2 சென்சார் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை காட்டும். இதன் ஸ்டிராப்பை எளிதில் கழற்றி மாட்டும் வசதிகொண்டது. இதனால் பல்வேறு வண்ணங்களில் விருப்பமான ஸ்டிராப்பை வாங்கி அணியலாம்.

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு வாரம் செயல்படும். கருப்பு, பச்சை, இளம் சிவப்பு உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் இது விற்பனைக்கு வந்துள்ளது.

Next Story