வானவில் : ரேஞ்ச் ரோவர் ‘எவோக்’


வானவில் : ரேஞ்ச் ரோவர் ‘எவோக்’
x
தினத்தந்தி 12 Feb 2020 12:17 PM GMT (Updated: 12 Feb 2020 12:17 PM GMT)

டாடா மோட்டார்ஸின் அங்கமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது ரேஞ்ச் ரோவர் காரில் புதிய தலைமுறை ‘எவோக்’ மாடலை அறிமுகம் செய்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் வகையில் இது வந்தாலும் பி.எஸ் 6 தரத்தில் அறிமுகமாகியுள்ளது. இது 132 கிலோவாட் இன்ஜீனியம் டர்போ சார்ஜ்டு டீசல் என்ஜினையும், 184 கிலோவாட் இன்ஜீனியம் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜினையும் கொண்டு அறிமுகமாகிஉள்ளது. 

மிக அழகிய ஸ்டைலான பிரீமியம் எஸ்.யு.வி. இதுவாகும். மிக அழகிய தோற்றப் பொலிவு இதற்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. மிகவும் மெல்லியதான முகப்பு எல்.இ.டி. விளக்கு அத்துடன் பகலில் ஒளிரும் டி.ஆர்.எல். விளக்கு ஆகியன இதன் தோற்றப் பொலிவுக்கு மெருகூட்டுகிறது. கதவு கைப்பிடிகள் பிரீமியம் தோற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

இதன் உள்புறத் தோற்றமும் சொகுசு கார்களுக்கு உரிய தன்மைகளோடு உள்ளன. ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாக இது விளங்குகிறது. லேன் அசிஸ்ட், பார்க்கிங் வசதி கேமரா ஆகியவற்றோடு டிரைவர் கண்காணிப்பு வசதி கொண்டது. டிரைவர் கண்ணயர்ந்தால் எச்சரிக்கை செய்யும். வழக்கமான சாலைப் பயணம் மட்டுமின்றி இது சாகச பயணத்துக்கும் ஏற்றது.

இதில் பின் இருக்கையில் பயணிகள் இருந்தாலோ அல்லது பொருட்கள் பெரிய அளவில் இடம்பெற்று பின்புறம் வரும் வாகனங்களை ரியர் வியூ கண்ணாடி மூலம் பார்க்க முடியாமல் போனால், டிரைவர் பின்புற கேமராவின் கீழ்பகுதியை செயல்படுத்தி அதன் மூலம் பின்னால் வரும் வாகனங்கள் பற்றிய விவரத்தை ஸ்கிரீனில் பார்க்க முடியும். இதற்கு ஒரு பொத்தானை அழுத்தினாலே போதுமானது. இத்தகைய மேம்பட்ட வசதி இதில் உள்ளது. மிகக் குறைவான வெளிச்சத்திலும் இது படங்களை துல்லியமாக வெளிப்படுத்தி திரையில் காட்டும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.54.94 லட்சத்தில் ஆரம்பமாகிறது.

Next Story