2019 டிசம்பர் காலாண்டில் அலகாபாத் வங்கி இழப்பு ரூ.1,986 கோடி


2019 டிசம்பர் காலாண்டில் அலகாபாத் வங்கி இழப்பு ரூ.1,986 கோடி
x
தினத்தந்தி 14 Feb 2020 11:10 AM GMT (Updated: 14 Feb 2020 11:10 AM GMT)

பொதுத்துறையைச் சேர்ந்த அலகாபாத் வங்கி, 2019 டிசம்பர் காலாண்டில் ரூ.1,986 கோடியை நிகர இழப்பாக கண்டுள்ளது.

புதுடெல்லி

பொதுத்துறையைச் சேர்ந்த அலகாபாத் வங்கி, 2019 டிசம்பர் காலாண்டில் ரூ.1,986 கோடியை நிகர இழப்பாக கண்டுள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அதன் இழப்பு ரூ.733 கோடியாக இருந்தது. ஆக, இவ்வங்கியின் இழப்பு அதிகரித்துள்ளது. இதே காலத்தில் வங்கியின் நிகர வட்டி வருவாய் 4 சதவீதம் சரிவடைந்து (ரூ.1,399 கோடியில் இருந்து) ரூ.1,338 கோடியாக குறைந்து இருக்கிறது. எனினும் செயல்பாட்டு லாபம் 17 சதவீதம் உயர்ந்து ரூ.898 கோடியாக உள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது அலகாபாத் வங்கிப் பங்கு ரூ.15.50-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே குறைந்தபட்சமாக ரூ.15-க்கு சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.15.35-ல் நிலைகொண்டது. இது, முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 0.66 சதவீத ஏற்றமாகும்.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story