என்.எம்.டீ.சி. லாபம் 13% குறைந்தது


என்.எம்.டீ.சி. லாபம் 13% குறைந்தது
x
தினத்தந்தி 14 Feb 2020 11:26 AM GMT (Updated: 14 Feb 2020 11:26 AM GMT)

பொதுத்துறையைச் சேர்ந்த என்.எம்.டீ.சி. நிறுவனம், நடப்பு நிதி ஆண்டில் (2019-20), டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.1,375 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது.

புதுடெல்லி

பொதுத்துறையைச் சேர்ந்த என்.எம்.டீ.சி. நிறுவனம், நடப்பு நிதி ஆண்டில் (2019-20), டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.1,375 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.1,576 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 13 சதவீதம் குறைந்துள்ளது.

இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் (ரூ.3,786 கோடியில் இருந்து) ரூ.3,137 கோடியாக குறைந்து இருக்கிறது. மொத்த செலவினங்கள் ரூ.1,491 கோடியாக உள்ளது. சென்ற நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அது ரூ.1,575 கோடியாக இருந்தது.

என்.எம்.டீ.சி. நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் (2019 ஏப்ரல்-டிசம்பர்) 2.20 கோடி டன் இரும்புத்தாது உற்பத்தி செய்து இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 2.19 கோடி டன்னாக இருந்தது. ஆக, உற்பத்தி 0.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், வியாழக்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது என்.எம்.டீ.சி. நிறுவனப் பங்கு ரூ.114.65-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.115-க்கும், குறைந்தபட்சமாக ரூ.109.60-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.110-ல் நிலைகொண்டது. இது, கடந்த புதன்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 4.10 சதவீத சரிவாகும்.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story