இந்திய முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள்


இந்திய முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள்
x
தினத்தந்தி 22 Feb 2020 10:41 AM GMT (Updated: 22 Feb 2020 10:41 AM GMT)

ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம், 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.95 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது.

ந்திய நிறுவனங்கள் தமது நிதி நிலை முடிவுகளை (2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டு) வெளியிட்டு வருகின்றன. முன்னணி நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் வருமாறு:-

டாட்டா குளோபல்

டாட்டா குளோபல் பிவரேஜஸ் நிறுவனம், 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.135 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.109 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் (ரூ.1,912 கோடியில் இருந்து) ரூ.1,961 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

ஜிந்தால் ஸா

ஜிந்தால் ஸா நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.119 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.150 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 21 சதவீதம் குறைந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் (ரூ.2,398 கோடியில் இருந்து) ரூ.2,537 கோடியாக அதிகரித்து இருக்கிறது. மொத்த செலவினம் ரூ.2,537 கோடியாக உயர்ந்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.2,182 கோடியாக இருந்தது.

உஜ்ஜிவான் பைனான்சியல்

உஜ்ஜிவான் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், மூன்றாவது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) ரூ.75 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனம் ரூ.31 கோடி லாபம் ஈட்டி இருந்தது. ஆக, லாபம் 2 மடங்குக்கு மேல் உயர்ந்து இருக்கிறது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் (ரூ.507 கோடியில் இருந்து) ரூ.764 கோடியாக அதிகரித்துள்ளது.

ஆபிள் இந்தியா

ஆபிள் இந்தியா நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.21 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.16 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 31 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 27 சதவீதம் உயர்ந்து (ரூ.74 கோடியில் இருந்து) ரூ.94 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

ஜி.எஸ்.கே. பார்மா

ஜி.எஸ்.கே. பார்மா நிறுவனம், 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.661 கோடியை ஒட்டுமொத்த நிகர இழப்பாக கண்டுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அதன் லாபம் ரூ.113 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் (ரூ.825 கோடியில் இருந்து) ரூ.778 கோடியாக குறைந்து இருக்கிறது.

ராம்கோ சிமெண்ட்ஸ்

ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம், 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.95 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.98 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 3 சதவீதம் குறைந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 5.9 சதவீதம் உயர்ந்து ரூ.1,290 கோடியாக இருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.1,217 கோடியாக இருந்தது.

Next Story