சிறப்புக் கட்டுரைகள்

கல்வி நிறுவனங்களை மூடியதால் உலகம் முழுவதும் 154 கோடி மாணவர்கள் பாதிப்பு -யுனெஸ்கோ தகவல் + "||" + UNESCO: Over 154 students affected amid COVID-19, girls worst hit

கல்வி நிறுவனங்களை மூடியதால் உலகம் முழுவதும் 154 கோடி மாணவர்கள் பாதிப்பு -யுனெஸ்கோ தகவல்

கல்வி நிறுவனங்களை மூடியதால் உலகம் முழுவதும் 154 கோடி மாணவர்கள் பாதிப்பு -யுனெஸ்கோ தகவல்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிறுவனங்களை மூடியதால் உலக அளவில் 154 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘யுனெஸ்கோ’ கூறியுள்ளது.
பாரீஸ், 

ஐ.நா. கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) கல்விக்கான உதவி தலைமை இயக்குனர் ஸ்டெபானியா கியானினி, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:- கொரோனா பரவல் தற்காப்பு நடவடிக்கையாக, உலகின் பல நாடுகளில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 

இதனால், கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் மாணவர்களில் 89 சதவீதத்துக்கு மேற்பட்டோர், அங்கு செல்ல முடியாமல் உள்ளனர். இந்த எண்ணிக்கையே சுமார் 154 கோடி இருக்கும். அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மாணவிகள் எண்ணிக்கை 74 கோடி ஆகும். அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவிகளில் 11 கோடிக்கு மேற்பட்டோர் குறைவான வளர்ச்சி கொண்ட நாடுகளில் வாழ்பவர்கள். அங்கெல்லாம் கல்வி பெறுவதே பெரும் போராட்டமாக இருக்கும். இந்த மாணவிகளில் கணிசமானோர் உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கி உள்ளனர். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், எத்தனை மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. 

வசதியான குடும்பத்து பெண்கள் மட்டும் தொடர்ந்து கல்வி கற்க வாய்ப்புள்ளது. மற்றவர்கள், படிப்பை பாதியில் கைவிடும் அபாயம் உள்ளது. இது, கல்வியில் பாலின இடைவெளியை அதிகரிக்கும். பாலியல் சுரண்டல் அதிகரிக்கும். சிறுவயது கர்ப்பம், கட்டாய திருமணம் ஆகியவையும் பெருகும்.

சில நாடுகள் காலவரையின்றி பள்ளிகளை மூடுவதற்கு தயாராகி வருவதால், கடந்த கால பிரச்சினைகளில் பெற்ற பாடங்களில் இருந்து, பெண் கல்வியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்னணு முறையில் பாடங்களை கற்பிக்கலாம். கற்பிக்கும் நேரம் குறைவதால், கற்றல் திறனும் பாதிக்கப்படும். பெற்றோருக்கு தங்கள் பணியையும் கவனித்துக் கொண்டு, குழந்தைகளின் கல்வியிலும் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளை திறக்க மக்களிடம் வரவேற்பு இல்லை: கருத்துக்கணிப்பு முடிவில் அம்பலம்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகளை திறக்க பெரும்பான்மையான மக்களிடம் வரவேற்பு இல்லை என்பது ஒரு கருத்துக்கணிப்பில் அம்பலமாகி உள்ளது.
2. கொரோனா அச்சுறுத்தல்: கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்கு வந்த புகார் பெட்டி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சேலம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் புகார் மனுக்களை பெறுவதற்கு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
3. அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று :”விரைவில் நலம் பெறுங்கள்” ரசிகர்கள் பிரார்த்தனை
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப்பச்சன் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
4. 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது: ரிசர்வ் வங்கி ஆளுநர்
கொரோனா தொற்று நெருக்கடியால் 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
5. கொரோனா அச்சுறுத்தல் ‘’வெளியே செல்ல பயமாக உள்ளது” - நடிகை தமன்னா
கொரோனா அச்சுறுத்தலால் வெளியே செல்ல பயமாக உள்ளது என்று நடிகை தமன்னா கூறினார்.