நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவடையவில்லை - திரிணாமுல் காங்கிரஸ் டுவிட்


நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவடையவில்லை - திரிணாமுல் காங்கிரஸ் டுவிட்
x
தினத்தந்தி 2 May 2021 2:07 PM GMT (Updated: 2 May 2021 2:07 PM GMT)

நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவடையவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிட்டார்.

இதற்கிடையில், நந்திகிராம் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதில் மம்தா பானர்ஜி - சுவேந்து அதிகாரி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பல கட்ட வாக்கு எண்னிக்கைக்கு பிறகும் தொடர்ந்து இரு வேட்பாளர்களுக்கும் இடையேயான வாக்குவித்தியாசம் மிகக்குறைவான அளவிலேயே உள்ளதால் யார் வெற்றி பெறுவார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இதற்கிடையில், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்துவிட்டதாக சில ஆங்கில ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவடையவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் 6.35-க்கு வெளியிட்ட பதிவில், நந்திகிராம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவடையவில்லை. தயவுசெய்து எதையும் ஊகிக்க வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஆங்கில செய்தி ஊடகமான ’இந்தியா டுடே’ நந்திகிராமில் 1,957 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரியிடம் மம்தா தோல்வியடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story