மூளை அருங்காட்சியகம்


மூளை அருங்காட்சியகம்
x
தினத்தந்தி 7 Jun 2021 10:14 AM GMT (Updated: 7 Jun 2021 10:14 AM GMT)

மூளைக்கான மிகப்பெரிய அருங்காட்சியகம், இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு உயிரினத்தின் செயல்பாடுகளுக்கும் முதன்மையாகத் திகழ்வது, மூளைதான். உடலில் தலை பகுதியில் சிறிய அளவில் இருக் கும் அந்த மூளையின் செயல்பாடு, பிரமிப்பின் உச்சம். பெங்களுரூவில் `நிமான்ஸ்' என்ற கட்டிடத்தில் இயங்கும் இந்த அருங்காட்சியகத்தில், மனித மூளை மட்டமின்றி, விலங்குகள், பறவைகளின் மூளைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மட்டும்தான் செல்ல முடியும் என்றில்லை. யார் வேண்டுமானாலும் செல்லலாம், அந்த மூளைகளை தொட்டுப் பார்க்கவும் முடியும்.

இங்கு கோழி, வாத்து, எலி, பசு, மனித மூளை என்று சுமார் 500 வகையான உயிரினங்களின் மூளைகள் வகைபடுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த மூளைகள் அனைத்தும் சுமார் 30 வருடங்களாக சேகரிக்கப்பட்டு, இங்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. மனித மூளையில் அது எப்படி வளர்ச்சியடைந்து முழுமைப் பெறுகிறது என்பதை, ஒவ்வொரு படிநிலையாக இங்கு காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும் வளர்ச்சியின்மை கொண்ட மூளையின் அமைப்பு எப்படி இருக்கும், நோய் தாக்கிய மூளை எப்படி இருக்கும் என்பது தொடர்பாகவும் இங்கே காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மூளை பற்றியும், அதன் பாதுகாப்பை பற்றி அறிந்துகொள்ளவும் இந்த அருங்காட்சியகத்திற்குச் சென்று வரலாம். பொதுவாக காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இலவசமாக இங்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த நெருக்கடியான கொரோனா காலகட்டம் முடிந்ததும் இங்கு ஒரு விசிட் அடித்து வாருங்கள், மாணவர்களே...

Next Story