சிறப்புக் கட்டுரைகள்

ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் + "||" + Realmi X 7 Max

ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ்

ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ்
ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் என்ற பெயரில் புதிய மாடல் ஸ்மார்ட்போனை ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இது 6.43 அங்குல முழு ஹெச்.டி. அமோலெட் திரையைக் கொண்டது. போன் சூடேறு வதைக் குறைக்கும் வகையில் முதல் முறையாக இதில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிளஸ், காப்பர் விசி கூலிங் தொழில் நுட்பம் உள்ளது. இதன் பின்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. செல்பி பிரியர் களுக்காக இதன் முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது.

4500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி, 50 வாட் சார்ஜிங் வசதியுடன் இது வெளி வந்துள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. கருப்பு, சில்வர், வெள்ளை உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் கிடைக்கும். 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.26,999. இதில் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.29,999.