சிறப்புக் கட்டுரைகள்

லம்போர்கினி ஹுராகேன் எவோ ஸ்பைடர் + "||" + Lamborghini Hurricane Evo Spider

லம்போர்கினி ஹுராகேன் எவோ ஸ்பைடர்

லம்போர்கினி ஹுராகேன் எவோ ஸ்பைடர்
ஸ்போர்ட்ஸ் கார்களில் மிகவும் பிரபலமான லம்போர்கினி நிறுவனம் ஹுராகேன் எவோ ஸ்பைடர் மாடல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகமான இந்த மாடல் தற்போது இந்தியாவில் அறிமுகமாகிறது. ஸ்டார்ட் செய்ததும் 3.5 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டு விடும் என்பதுதான் இதன் சிறப்பாகும். மூடி மடங்கும் வகையிலான மேற்கூரை கொண்ட இந்த கார் 50 கிமீ. வேகத்தில் செல்லும்போதுகூட 17 விநாடிகளில் மடங்கிக் கொள்ளும் தன்மை கொண்டது.

இது 5.2 லிட்டர் திறன் கொண்ட வி 10 பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. 610 ஹெச்.பி. திறன் 560 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக்கூடியது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 324 கி.மீ ஆகும். டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.3.25 கோடிக்கு மேல் இருக்கும் எனத் தெரிகிறது.