சிறப்புக் கட்டுரைகள்

ரெயில்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்! + "||" + Interesting information about trains!

ரெயில்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்!

ரெயில்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்!
இந்திய ரெயில்வே பற்றிய சில சுவாரசிய தகவல்களை பார்க்கலாம்...
* இந்தியா முழுவதும் 60 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு இருப்பு பாதை உள்ளது. பேரிடர் காலங்களை தவிர்த்து, மற்ற எல்லா நாட்களிலும் 11 ஆயிரம் ரெயில்கள் இயங்குகின்றன.

* சுமார் 15 லட்சத்து 40 ஆயிரம் பணியாளர்கள் இதில் பணிபுரிகின்றனர். போர்ப்ஸ் பட்டியலின்படி உலகின் 4-வது மிகப் பெரிய நிறுவனம் இது.

* கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில்தான் இந்தியாவிலேயே நீண்ட தொலைவு பயணிக்கிறது. சுமார் 4 ஆயிரத்து 286 கிலோ மீட்டர் பயணிக்கும் இந்த ரெயில், 56 நிலையங்களில் நின்று செல்கிறது. மொத்த பயண நேரம் 82.30 மணி நேரம்.

* திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி நிஜாமுதீன் வரை செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில், 3,149 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கிறது. இதில் வதோதரா மற்றும் கோட்டா நகரங்களுக்கிடையே எந்த ஒரு ரெயில் நிலையத்திலும் நிற்காமல் சுமார் ஆறரை மணி நேரம் இந்த ரெயில் செல்லும்.

* ஹவுரா- அம்ரிஸ்தர் நகரங்களுக்கிடையே ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகபட்சமாக 115 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

* புது டெல்லி- போபால் இடையே ஓடும் சதாப்தி எக்ஸ்பிரஸ்தான் இந்தியாவிலேயே அதி வேகமாக செல்லும் ரெயில். மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். உதகை மலை ரெயில்தான் இந்தியாவிலேயே குறைந்த வேகத்தில் செல்லும் ரெயில். மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில்தான் இது செல்லும்.

* அரக்கோணம் - ரேணிகுண்டா பாதையில் உள்ள ‘வெங்கடரநரசிம்மராஜுவரிபேட்டை' என்ற பெயர் கொண்ட ரெயில் நிலையம்தான் இந்தியாவிலேயே உச்சரிக்க முடியாத அளவிற்கு நீண்ட பெயர் கொண்ட ரெயில் நிலையம் . ஒடிசாவில் உள்ள ‘ஐபி,' குஜராத்தில் உள்ள ‘ஒடி' ரெயில் நிலையங்கள் அதற்கு நேர் எதிரானவை.

* இந்தியாவிலேயே இரு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரே ரெயில் நிலையம் நவ்பூர் ரெயில் நிலையம்தான். இதன் ஒரு பகுதி மகாராஷ்டிராவிலும், அடுத்த பகுதி குஜராத்திலும் அமைந்துள்ளது.

* மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் ஒரே ரெயில் பாதையில் எதிர் எதிராக இரு ரெயில் நிலையங்கள் அமைந்துள்ளன. ஒன்று ஸ்ரீராம்பூர் மற்றொன்று பேலாபூர்.

* சென்னையில் இருந்து கோவா வாஸ்கோடகாமா வரை செல்லும் ரெயில், ‘தூத்சாகர்' என்ற நீர்வீழ்ச்சியை கடந்து செல்கிறது.