சிறப்புக் கட்டுரைகள்

ஜெப் இஸட் ஸ்மார்ட் கடிகாரம் + "||" + Jeb Z Smart Watch

ஜெப் இஸட் ஸ்மார்ட் கடிகாரம்

ஜெப் இஸட் ஸ்மார்ட் கடிகாரம்
மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் அமேஸ்பிட் நிறுவனம் புதிதாக ஜெப் இஸட் ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மேல்பகுதி டைட்டானியம் உலோகத்தால் ஆனது. இந்நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாடுகளைத் தொடங்கி மூன்று ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு இப்புதிய ரக கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.39 அங்குல அமோலெட் திரை உள்ளது. இதய துடிப்பை கண்காணிக்கும், ஆக்சிஜன் அளவை துல்லியமாகக் காட்டும். ஜி.பி.எஸ். வசதி கொண்டது. அலெக்ஸா குரல் வழி கட்டுப்பாட்டு மூலமும் இதை செயல்படுத்தலாம்.

இதில் 340 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 15 நாட்களுக்கு செயல்படும். புளூடூத் 5.0 இணைப்பு வசதி கொண்டது. 12 வகையான விளையாட்டுகளில் எதில் ஈடுபட்டாலும் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை இது காட்டும். இதன் விலை சுமார் ரூ.25,999.