சிறப்புக் கட்டுரைகள்

முறைகேடாக நிதிதிரட்டும் மோசடி நிறுவனங்கள் + "||" + Fraudulent companies that raised funds illegally

முறைகேடாக நிதிதிரட்டும் மோசடி நிறுவனங்கள்

முறைகேடாக நிதிதிரட்டும் மோசடி நிறுவனங்கள்
மோசடி நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை சிறு முதலீட்டாளர்களிடம் இருந்து முறைகேடாக திரட்டி வருகின்றன. இந்த நிறுவனங்கள் மீது செபி வழக்கு தொடுத்திருக்கிறது.
இது போன்ற போலி நிறுவனங்களை அடையாளம் காண முடியாமல் சிறு முதலீட்டாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பல நிறுவனங்கள் முறைகேடாக நிதி திரட்டி இருப்பதை கடந்த 2014-ம் ஆண்டு செபி கண்டறிந்தது. அந்த நிறுவனத்தின் சொத்துக்களை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்கும் நடவடிக்கையை செபி எடுத்தது. சொத்துக்களை விற்பதற்கான நடவடிக்கையை எடுத்தாலும், முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்த மொத்த தொகையும் கிடைப்பதில்லை. அதனால் இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்து கஷ்டப்படுவதை விட, முறைகேடான திட்டங்களை கண்டறிந்து அவற்றில் முதலீடு செய்யாமல் இருப்பதே நல்லது.

2014-ம் ஆண்டு செபி சட்டத்தின்படி ரூ.100 கோடிக்கு மேல் திரட்டப்படும் கூட்டு திட்டங்கள் ஏதாவது அமைப்பின் கீழ் மட்டுமே செய்யப்பட வேண்டும். கூட்டுறவு சங்கம், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் டெபாசிட், இன்சூரன்ஸ், பென்ஷன் திட்டங்கள், கார்ப்பரேட் டெபாசிட், நிதி, மியூச்சுவல் பண்ட் மற்றும் சீட்டு உள்ளிட்ட பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் மட்டுமே நிதி திரட்ட முடியும். இந்த பட்டியலில் இல்லாத நிறுவனங்கள் ரூ.100 கோடிக்கு மேல் நிதி திரட்டும் பட்சத்தில் அது மோசடி திட்டம்தான்.

இந்த அனைத்து திட்டங்களிலும் முதலீட்டாளர்கள் பணத்தை முதலீடு செய்து லாபத்துக்காக காத்திருக்கின்றனர். முதலீடு செய்த பிறகு அந்த திட்டத்தின் தினசரி நடவடிக்கைகளை தெரிந்து கொள்ள முடியாது. ஒருவேளை இது போன்ற திட்டங்களில் நீங்கள் ஏற்கெனவே முதலீடு செய்திருப்பவராக இருந்தால், நீங்கள் முதலீடு செய்திருக்கும் ஆவணங்களை முதலில் பத்திரப்படுத்துங்கள். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் இந்த ஆவணங்கள்தான் உதவும்.

பிரச்சினை உருவாகும் சமயத்தில் நிறுவனத்தின் தரப்பில் இருந்து சமரச பேச்சு வார்த்தைகள் தொடங்கும். குறைந்தபட்ச தொகையை கொடுத்து உங்களிடம் இருக்கும் உண்மையான ஆவணங்களை மீட்க சம்பந்தப்பட்ட நிறுவனம் முயற்சி செய்யும். எனவே செபி மற்றும் நீதிமன்றத்திடம் இருந்து முழுமையான உத்தரவு வரும் வரையில் பெரிய அளவில் எந்த முடிவையும் எடுத்துவிடக் கூடாது.