பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 5 அறிமுகம்


பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 5 அறிமுகம்
x
தினத்தந்தி 22 Sep 2021 11:28 AM GMT (Updated: 22 Sep 2021 11:28 AM GMT)

பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்தியாவில் புதிதாக எக்ஸ் 5, எக்ஸ் டிரைவ் ஸ்போர்ட் பிளஸ் மாடல் கார்களை அறிமுகம் செய்துள்ளது.

பிரீமியம், சொகுசு கார்களைத் தயாரிக்கும் ஜெர்மனியின் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்தியாவில் புதிதாக எக்ஸ் 5, எக்ஸ் டிரைவ் ஸ்போர்ட் பிளஸ் மாடல் கார்களை அறிமுகம் செய்துள்ளது. இரட்டை பவர் டர்போ 3 லிட்டர் என்ஜினைக் கொண்டது. இப்பிரிவில் மிகச் சிறப்பான செயல்பாட்டைக் கொண்டதாக இது வந்துள்ளது. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் ஜெஸ்டர் கண்ட்ரோல், ரிவர்சிங் அசிஸ்டென்ட் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த புதிய மாடல் கார் சென்னை மறைமலை நகரில் உள்ள ஆலையில் தயாரிக்கப்படுகிறது.

வெள்ளை, நீலம், கருப்பு உள்ளிட்ட கண்கவர் நிறங் களில் இது கிடைக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் இது வந்துள்ளது. ஸ்டார்ட் செய்து 5.5 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தை இது தொட்டுவிடும். அனைத்து சக்கர சுழற்சி கொண்டது. டைனமிக் டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், அடாப்டிவ் சஸ்பென்ஷன் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. டிரைவர் அசிஸ்டென்ஸ், பார்க்கிங் அசிஸ்டென்ட் வசதிகளைக் கொண்டது. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் 6 ஏர் பேக்குகள் உள்ளன.

Next Story