சிறப்புக் கட்டுரைகள்

டுகாடி சூப்பர் ஸ்போர்ட் 950 + "||" + Ducati Super Sport 950

டுகாடி சூப்பர் ஸ்போர்ட் 950

டுகாடி சூப்பர் ஸ்போர்ட் 950
டுகாடி நிறுவனம் சூப்பர் ஸ்போர்ட் 950 மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
சிவப்பு நிற பிரேம், கருப்பு நிற அலாய் சக்கரம், வெள்ளை நிற புறத்தோற்றத்தில் மிகச் சிறப்பாகவும், கம்பீரமாகவும் சூப்பர் ஸ்போர்ட் 950 தோற்றமளிக்கிறது. அலாய் சக்கரத்தின் ஒரு பக்கத்தில் அழகான சிவப்பு நிற பெயிண்ட் இதன் அழகிய தோற்றத்தை மெருகேற்றுகிறது. சாகச பயணத்தை விரும்பும் இளைஞர் களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் எவ்வளவு கி.மீ. தூரம் ஓடியிருந்தாலும் இரண்டு ஆண்டுகளுக்கு உத்திரவாதம் அளிக்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது 937 சி.சி. திறன் கொண்டது. 110 பி.எஸ். திறனை 9,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தக் கூடியது. இதில் 6 கியர்கள் உள்ளன. ஸ்லிப்பர் கிளட்ச் வசதி கொண்டது. மூன்று விதமான ஓட்டும் நிலைகள் (நகர சாலைகள், நீண்ட தூர பயணம், ஸ்போர்ட்) உள்ளன. இதில் வீலி சாகசம் மேற்கொள்ள முடியும்.