சிறப்புக் கட்டுரைகள்

டுகாடி ஸ்ட்ரீட் பைட்டர் வி 4 எஸ்.பி + "||" + Ducati Streetfighter V4 SP

டுகாடி ஸ்ட்ரீட் பைட்டர் வி 4 எஸ்.பி

டுகாடி ஸ்ட்ரீட் பைட்டர் வி 4 எஸ்.பி
டுகாடி ஸ்ட்ரீட் பைட்டர் வி 4 எஸ்.பி. என்ற புதிய மாடல் மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எஸ்.பி. என்பது இதில் ஸ்போர்ட் புரொடெக்‌ஷன் என்பதைக் குறிப்பதாகும். பந்தயங்களில் சீறிப்பாய்வதற்கேற்ப சில தொழில்நுட்ப அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

1,103 சி.சி. திறன் கொண்ட இது, 208 ஹெச்.பி. திறனை 13 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும், 123 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 9,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். இதன் எடை 177 கிலோ. வாகனத்தின் எடையைக் குறைப்பதற்காக இதில் பெரும்பாலான பகுதிகள் கார்பன் பைபரால் ஆனது. இதில் ஆஹ்லின்ஸ் எலெக்ட்ரானிக் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதில் பிரெம்போ ஸ்டைலெமா ஆர் மோனோபிளாக் பிரேக் பயன்படுத்தப் பட்டுள்ளது. சர்வதேச அளவில் இது அறிமுகப்படுத்தப்படுகிறது.