சாம்சங் கேலக்ஸி ஏ 32


சாம்சங் கேலக்ஸி ஏ 32
x
தினத்தந்தி 25 Nov 2021 10:15 AM GMT (Updated: 25 Nov 2021 10:15 AM GMT)

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வரிசையில் ஏ 32 மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இது 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டதாகும். இதன் விலை சுமார் ரூ.23,499. கருப்பு, நீலம், வயலெட் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் கிடைக்கும். இது 6.4 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் அமோலெட் திரையைக் கொண்டது.

இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 எஸ்.ஓ.சி. பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளது. பின்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 20 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவும் உள்ளது. திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் கொண்டது. 15 வாட் சார்ஜருடன் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளதாக இது வந்துள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது.


Next Story