சிறப்புக் கட்டுரைகள்

ஷபில் 4 நெக்பேண்ட் இயர்போன் + "||" + Shuffle 4 neckband earphones

ஷபில் 4 நெக்பேண்ட் இயர்போன்

ஷபில் 4 நெக்பேண்ட் இயர்போன்
ஆடியோ சார்ந்த மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் யு அண்ட் ஐ நிறுவனத்தின் துணை நிறுவனமான யு அண்ட் ஐ பிரைம் நிறுவனம் தற்போது அடுத்த தலைமுறை இயர்போனாக நெக் பேண்டுடன் கூடிய ஷபில் 4 மாடலை அறிமுகம் செய்துள்ளது.
கருப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று கண்கவர் வண்ணங் களில் வந்துள்ளது. காந்த செயல் பாடுடன் கூடிய சுவிட்ச் கண்ட்ரோல், ஸ்மார்ட் அதிர்வு, விரைவாக சார்ஜ் ஆவது உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டது.

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 15 மணி நேரம் நீடித்திருக்கும். மறுமுனையில் பேசுபவரது குரல் மற்றும் இனிய இசையை வெளிப்படுத்தும் வகையில் இதன் ஆடியோ சிஸ்டம் துல்லியமாக உள்ளது. காதினுள் பொருந்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உறுதியான ஏ.பி.எஸ். பிளாஸ்டிக்கால் ஆனது. காதிற்கு வலி ஏற்படுத்தாத வகையில் முனைப் பகுதி மிருதுவான சிலிக்கானால் ஆனது. வியர்வை மற்றும் தூசு புகாத வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

உபயோகத்தில் இல்லாத போது இயர்போனின் இரண்டு முனைகளையும் ஒருங்கிணைத்து விட்டால் அது அணைந்துவிடும். 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் செயல்படும். இந்த இயர்போனின் விலை சுமார் ரூ.999.