அம்பரேன் ஸ்மார்ட் கண்ணாடி


அம்பரேன் ஸ்மார்ட் கண்ணாடி
x

இது ஸ்மார்ட் யுகம். உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது அம்பரேன் நிறுவனம். கண்ணுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு உங்களது காதிற்கு இனிய இசையை வழங்கும்.

சதுர மற்றும் வட்ட வடிவிலான கண்ணாடி பிரேமில் வந்துள்ளது. தொடு செயல்பாடு மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியும். 5.1 புளூடூத் இணைப்பு வசதி கொண்டது.

இதில் உள்ள பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 மணி நேரம் தொடர்ந்து செயல்படும். ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளை ஏற்பது மற்றும் நிராகரிப்பது போன்றவற்றையும் இதில் மேற்கொள்ள முடியும். குரல் வழி கட்டுப்பாடு மூலமும் செயல் படும். புற ஊதாக்கதிர்கள் புகாத வகையில் கண்ணுக்குக் குளிர்ச்சியை வழங்கும் வகையில் இதன் லென்ஸ்கள் உள்ளன. துல்லியமான பார்வையை அளிப்பதோடு கண் கூசாத வகையில் பாதுகாப்பு வசதி கொண்டது.

இதில் காந்த விசை கொண்ட கிளிப் வசதி உள்ளது. இதனால் பார்வைத் திறனுக்கு கண்ணாடி அணிபவர்கள் அதற்குரிய லென்ஸை இதில் பொருத்திக்கொள்ள முடியும். ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்ற வடிவில் இது வந்துள்ளது. உள்ளீடாக மைக்ரோ போன் மற்றும் ஸ்பீக்கர் வசதி கொண்டது.

பிரேம் மற்றும் லென்ஸ்களை கழற்றி மாற்றும் வகையிலான வடிவமைப்பு கொண்டது. விரை வாக சார்ஜ் ஆகும். முழுமையாக சார்ஜ் செய்தால் 7 மணி நேரம் செயல்படும். இதன் விலை சுமார் ரூ.4,999.


Next Story