நில அதிர்வை தாங்கும் நியூசிலாந்து அருங்காட்சியகம்


நில அதிர்வை தாங்கும் நியூசிலாந்து அருங்காட்சியகம்
x

நில அதிர்வை தாங்கும் வகையில் நியூசிலாந்தில் வெல்லிங்டன் நகரில் ஒரு அருங்காட்சியகத்தை கட்டி எழுப்பி உள்ளார்கள்.

அதிக ஆயுளை நமக்கு மட்டுமல்ல, நமது வீட்டுக்கும் விரும்புவோம். ஏனெனில் சாமானியர்கள் வாழ்க்கையில் ஒரு முறைதான் வீடு கட்டுகிறார்கள். வீடு என்பது அத்தியாவசியம் எனும்போது அதன் பாதுகாப்பும் மிகவும் அத்தியாவசியமானது. இப்போதெல்லாம், பல இடங்களில் திடீர் திடீரென நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. ஒரு வீடு கட்டும்போது அது பூமி அதிர்ச்சியைத் தாங்கும் தன்மையில் உள்ளதா? என்பதைப் பார்க்க வேண்டியதும் அவசியமாகிவரும் சூழல் இது. ஆகவே எப்படி கட்டுமானம் அமைத்தால் வீடு அசாதாரண சூழ்நிலைகளை தாங்கிநிற்கும் என்பது போன்றவை குறித்து முன்பே அறிந்துகொண்டால் அது நமக்கு நலம் பயக்கும்.

நிலநடுக்கத்தின்போது, வீட்டின் ஆதாரமான நிலமே நிலைகுலைகிறது. ஆகவே அதன் மேல் அமைந்த வீடு நிலைநிற்க முடியாமல் தடுமாறிச் சரிகிறது. இதைப் போக்க என்ன செய்ய வேண்டும்? நிலத்தில் ஏற்படும் அதிர்ச்சியை அதன் மேல் கட்டப்பட்டுள்ள வீட்டுக்குக் கடத்தாத தொழில்நுட்பம் வேண்டும். அதாவது பலத்த அதிர்ச்சியை வீடு தாங்கிக்கொள்ள அவற்றுக்கு அதிர்ச்சி தாங்கி வேண்டும். இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது நமக்கு ஏற்படும் பாதிப்பைப் போக்க அவற்றில் அதிர்ச்சி தாங்கிகள் அமைக்கப்படுவது போல் வீட்டிலும் அதிர்ச்சி தாங்கிகள் அமைக்க வேண்டும். ஆகவே நிலம் அதிர்ந்தாலும் வீடு அதிராமல் காப்பாற்றப்படும், என்கிறார்கள் நிபுணர்கள். இதற்கு ஐஸோலேட்டிங் பேஸ் எனச் சொல்கிறார்கள். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நியூசிலாந்தில் வெல்லிங்டன் நகரில் ஒரு அருங்காட்சியகத்தை கட்டி எழுப்பி உள்ளார்கள். வழக்கமான கட்டிடங்களைக் கட்டுவதைவிட, அதிர்வை தாங்கும் வகையிலான கட்டிடங்களை உருவாக்கச் சற்றுச் செலவு அதிகமாகும். ஆனால், இயற்கைச் சீற்றங்களால் வீடு அடையும் சேதங்களைக் குறைக்க, நில அதிர்வு அதிகம் உள்ள பகுதிகளில் இந்த தொழில்நுட்பம் தேவை என்று, இத்துறை வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.


Next Story