போகோ எம் 5 ஸ்மார்ட்போன்


போகோ எம் 5 ஸ்மார்ட்போன்
x

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பிரபலமாகத் திகழும் போகோ நிறுவனம் எம் 5 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.58 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் மற்றும் எல்.சி.டி. திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர் உள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் உள்ளது. நினைவகத் திறனை 512 ஜி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் விரிவாக்கம் செய்ய முடியும். இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது.

இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளது. 50 மெகா பிக்ஸெல் கேமரா பின்புறமும், 8 மெகா பிக்ஸெல் கேமரா முன்புறமும் உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 18 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. நீலம், கருப்பு, மஞ்சள் உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ள இந்த மாடலின் விலை சுமார் ரூ.12,499.


Next Story