தரையில் படுத்துக்கொண்டே கோல்கம்பத்துக்குள் கால்பந்தை சரியாக உதைக்கும் குழந்தை! வைரல் வீடியோ..!


தரையில் படுத்துக்கொண்டே கோல்கம்பத்துக்குள் கால்பந்தை சரியாக உதைக்கும் குழந்தை! வைரல் வீடியோ..!
x
தினத்தந்தி 27 Sep 2022 1:02 PM GMT (Updated: 2022-09-27T20:50:48+05:30)

அந்த குழந்தை தரையில் படுத்துக்கொண்டே பந்தை கோல் கம்பத்தில் சரியாக உதைக்கும் வீடியோ வெளியாகி ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சென்னை,

ஒரு தீவிர கால்பந்து ரசிகர் தனது குழந்தைக்கு ஒரு பந்து மற்றும் ஒரு கோல்கம்பத்தை வாங்கி கொடுத்துள்ளார். மேலும், அந்த குழந்தை பிறந்தது முதல், கால்பந்து பயிற்சியளித்துள்ளார்.

அந்த குழந்தை தவழும் பருவத்திற்கு முன்னரே தரையில் படுத்துக்கொண்டே பந்தை கோல் கம்பத்தில் சரியாக உதைக்கும் வீடியோ வெளியாகி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அந்த குழந்தையின் தந்தை, 'மான்செஸ்டர் யுனைடெட்' கால்பந்து கிளப் அணியின் தீவிர கால்பந்து ரசிகர் என்று தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் காலப்போக்கில் குழந்தை வளர வளர ஒவ்வொரு பருவத்திலும் அந்த குழந்தை கால்பந்தை மிகச்சரியாக உதைத்து கோல் போஸ்டில் பந்தை அடித்து வந்துள்ளது. குழந்தையின் இந்த செயல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

எதிர்காலத்தில் அந்த குழந்தை மிகப்பெரிய திறமையான ஒரு கால்பந்து வீரராக வருவான் என வீடியோவை கண்ட பலரும் கூறியுள்ளனர்.


Next Story