வி.யூ. குளோ எல்.இ.டி. ஸ்மார்ட் டி.வி.


வி.யூ. குளோ எல்.இ.டி. ஸ்மார்ட் டி.வி.
x

வீட்டு உபயோக மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் வி.யூ. நிறுவனம் புதிதாக 50 அங்குலம், 55 அங்குலம் மற்றும் 65 அங்குல அளவுகளில் குளோ எல்.இ.டி. ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் டி.வி.யாக வந்துள்ள இந்த மாடல்களில் 104 வாட் திறன் கொண்ட ஸ்பீக்கர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குரல் வழி கட்டுப்பாட்டில் செயல் படுவதால் ரிமோட் உதவியின்றி இதை இயக்கமுடியும். இதில் குளோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன் படுத்தப்பட்டுள்ளது.

மேலும் குவாட் கோர் பிராசஸர் உள்ளது. 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. நினைவகம் கொண்டது. ரிமோட் உதவியோடு நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூ-டியூப், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட சேனல்களைக் காண முடியும். இதன் விலை சுமார் ரூ.35,999. இதில் 55 அங்குல மாடல் விலை சுமார் ரூ.40,999. 65 அங்குல மாடல் விலை சுமார் ரூ.60,999.


Next Story