திருப்பதி-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்; தெற்கு ரெயில்வே அறிவிப்பு


திருப்பதி-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்; தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2022 11:07 AM IST (Updated: 7 Oct 2022 6:20 PM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிகள் காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணிகள் காரணமாக கிழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • சென்னை சென்டிரல்-கோவை இடையே மதியம் 2.30 மணிக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி அதிவிரைவு ரெயில் இன்று(வெள்ளிக்கிழமை), 11-ந்தேதி, 14-ந்தேதி மற்றும் 21-ந்தேதிகளில் 30 நிமிடங்கள் தாமதமாக மதியம் 3 மணிக்கு இயக்கப்படும்
  • மேல்மருவத்தூர்-விழுப்புரம் இடையே காலை 11.30 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை(சனிக்கிழமை) முதல் 17-ந்தேதி வரை விக்கிரவாண்டி-விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் மேல்மருவத்தூரில் இருந்து விக்கிரவாண்டி வரை மட்டும் செல்லும்.
  • விழுப்புரம்- மேல்மருவத்தூர் இடையே மதியம் 1.35 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை(சனிக்கிழமை) முதல் 17-ந்தேதி வரை விழுப்புரம்- விக்கிரவாண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் விக்கிரவாண்டியில் இருந்து மதியம் 1.50 மணிக்கு மேல்மருவத்தூர் நோக்கி இயக்கப்படும்.
  • திருப்பதி-புதுச்சேரி இடையே அதிகாலை 4.10 மணிக்கு இயக்க்ப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை(சனிக்கிழமை) முதல் 17-ந்தேதி வரை விழுப்புரம் -புதுச்சேரி இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
  • புதுச்சேரி-திருப்பதி இடையே மதியம் 2.55 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை(சனிக்கிழமை) முதல் 17-ந்தேதி வரை புதுச்சேரி-விழுப்புரம் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது. இந்த ரெயில் விழுப்புரத்தில் இருந்து மதியம் 3.45 மணிக்கு திருப்பதி நோக்கி இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story