தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்


தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் கற்றலின் இனிமை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியி்ல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தீயணைப்புத்துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் அழகுராணி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை நாகசுப்பு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் பள்ளி மாணவர்கள் பட்டாசு வெடிக்கும் போது கையாளக்கூடிய முறைகள், தூரங்கள், பாதுகாப்புகள், குறித்து பேசினார். மேலும் எண்ணெய் சம்பந்தப்பட்ட காயங்களுக்கு தண்ணீர் ஊற்றக்கூடாது என்றும், அடுப்பில் பற்றிக்கொள்ளும் தீயை அணைக்க சாக்கு அல்லது போர்வையை பயன்படுத்த வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து தீயணைப்புத்துறை வீர்ரகள் ராஜா, செந்தில்குமார், வினோத்குமார் ஆகியோர் செயல் விளக்க பயிற்சியளித்தனர். இதில், மாணவர்கள், ஆசிரியர்கள், வட்டார வளமைய அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை சரளா நன்றி கூறினார்.


Next Story