சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா
திசையன்விளை சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது
திசையன்விளை:
திசையன்விளை செல்வமருதூர் அடைக்கலம் காத்த விநாயகர் கோவில் அருகில் அமைந்துள்ள ஸ்ரீசண்முகநாத சாய்பாபா கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கலந்து கொண்டு, கும்பாபிஷேக விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள் நடந்தது. அதை தொடர்ந்து சண்முகநாத சாய்பாபா, விநாயகர், சுப்பிரமணியர், தத்தாத்ரேயர் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விேஷச அலங்கார பூஜை, அன்னதானம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி வக்கீல் ஏ.எம்.இசக்கியப்பன், டாக்டர் அறம் வளர்த்தநாதன், மகாலட்சுமி நாதன், சுமதி இசக்கியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.